தந்தையின் அமைச்சின் கீழ், மகனுக்குப் பதவி: தூக்கியெறிந்தார் ஜனாதிபதி

🕔 June 14, 2018

– முன்ஸிப் அஹமட் –

மீன்பிடித் துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவின் மகன்உதார விஜயமுனி சொய்சா; மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங், மேற்படி பதவியிலிருந்து உதார விஜயமுனி சொய்சா நீக்கப்பட்டுள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஊவா மாகாணசபை உறுப்பினரான சட்டத்தரணி உதார, மேற்படி பதவிக்கு – அவரின் தந்தையினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் பதவியிலிருந்து, மீன்பிடி துறை அமைச்சரின் மகன் நீக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, டொக்டர் சஜித் மஞ்சுல என்பவர், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மே மாதம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, மீன்பிடித் துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்