தேர்தல்களில் நான் வாக்களிப்பதில்லை: மஹிந்த தேசப்பிரிய

🕔 June 13, 2018

தான் 2011 ஆம் ஆண்டில் இருந்து தேல்தல்களில் வாக்களிக்கவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“நான் விரும்பினால் வாக்களிக்கலாம். ஆனால் கட்சி சார்பாக வாக்களித்தேன் என்று நினைப்பார்கள். வாக்களிக்காவிட்டாலும் இவர் தகுதியானவர் இல்லை என்று சொல்வார்கள்” எனவும் அவர் கூறியுள்ளார்.

வாக்காளர் தினத்தை முன்னிட்டு நேற்று செவ்வாய்கிழமை தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் இதனைக் கூறினார்.

தேர்தலில் நீங்கள் வாக்களிப்பதில்லையா என இளைஞர் ஒருவர் கேட்டபோது; “யாரும் சிறையில் வைக்கப்பட்டு மரண தண்டணை விதிக்கப்படாவிட்டால், லஞ்ச ஊழல் செயல்களுக்கு ஆளாகாது விட்டால், யாருடைய பெயரையும் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கமுடியாது. எனக்கு வாக்கு இருந்தது. ஆனால் நான் தேர்தல் ஆணையாளராக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து வாக்களிக்க வில்லை” என்றும் அவர் இதன் போது விபரித்தார்.

Comments