அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர், கோட்டாவை சந்திக்கின்றனர்

🕔 June 11, 2018

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய  சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நாளை செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது தற்கால அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால அரசியல் குறித்து ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments