நாடாளுமன்ற உறுப்பினரானார் உபவேந்தர் இஸ்மாயில்; வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது

🕔 June 7, 2018

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நவவி ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் சீனி மொஹமட் மொஹமட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு தேர்தல் ஒப்பந்தத்தின்படி ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு, புத்தளத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவி நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், மூன்று வருடங்கள் நிறைவடையும் தறுவாயில் மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கு இணங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நவவி – தனது பதவியை கடந்த 23ஆம் திகதி ராஜிநாமா செய்தார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர்  சீனி மொஹமட் மொஹமட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று புதன்கிழமை வெளியாகியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்