அமித் வீரசிங்க மீது தாக்குதல்; அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை

🕔 May 27, 2018

காசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த அமித், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவரே அமித் வீரசிங்க மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

கண்டி மாவட்டத்தில்  முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அமித் வீரசிங்க மீது இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Comments