தாக்குதல் நடந்த இடங்களில் அமைச்சர் றிசாட்; பொலிஸ் மா அதிபருடன் பேசி நிலைமைகளை எடுத்துரைப்பு

🕔 March 6, 2018

சிங்கள காடையர்கள் தாக்கி சேதப்படுத்திய கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிருவாகத்தினருடனும் தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

சுமார் 25 பேர் கொண்ட காடையர் குழுவினால் இந்தப் பள்ளிவாசல் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் போது, பள்ளிவாசலுக்கு பொறுப்பான முஅத்தின், பள்ளிவாசலின் இரண்டாம் மாடியிலிருந்து குதித்து தப்பியதாக, அமைச்சரிடம் பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியினூடாக பேசிய அமைச்சர், அங்குள்ள நிலைமை தொடர்பில் எடுத்துரைத்தார். தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சருடன் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷ்ஹாக், மேல் மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாயிஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் ஆகியோரும் சென்றிருந்தனர்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்