மு.காங்கிரஸ் தலைமையகத்தில் ஆடைக் கண்காட்சி; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

🕔 February 28, 2018
டைக் கண்காட்சியொன்று, முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில், இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீனின் நிதி ஒதுக்கீட்டில் தையல் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவிகள், இந்த ஆடைக் கண்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது, தையல் பயிற்சியினை நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்களுடம் வழங்கி வைக்கப்பட்டன.

மாணவிகளுக்கு சான்றிதழ்களை மு.கா. தலைவர் வழங்கி வைத்ததோடு, ஆடைக் கண்காட்சியினையும் ஆரம்பித்து வைத்தார்.

(மு.காங்கிரசின் ஊடகப் பிரிவு)  

Comments

புதிது பேஸ்புக் பக்கம்