சட்டம் ஒழுங்கு அமைச்சை, இரண்டு வாரங்களுக்கே ரணில் வைத்திருப்பார்

🕔 February 25, 2018

ட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக – பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளபோதும், இரண்டு வாரங்களுக்கு மட்டுமே, அவர் அந்தப் பதவியினை தன்வசம் வைத்திருப்பார் என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவிக்காக, சரத் பொன்சாகாவின் பெயரையே பிரதமர் ஆரம்பத்தில் சிபாரிசு செய்திருந்தார். ஆனாலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன் காரணமாகவே, குறித்த பிரச்சினை முடியும் வரையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியினை பிரதமர் தற்காலிகமாக பொறுப்பேற்றதாக கூறப்படுகிறது.

இதேவேளை, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை சரத் பொன்சேகாவுக்கு வழங்க வேண்டாமென, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், முக்கியமான பௌத்த மதகுருமார் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சட்டத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரை, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக எவ்வாறு நியமிக்க முடியும் என, முன்னணி பௌத்த பிக்கு ஒருவர் ஜனாதிபதியிடம் வினவியதாகவும், குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்