மஸ்தான்: வெற்றிலையில் வென்ற, ஒரே முஸ்லிம்

🕔 August 20, 2015
Masthan - 021.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் இம்முறை பொதுத் தேர்தலில், நாடு முழுவதும் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களில், வன்னி மாவட்டத்தில் களமிறங்கிய கே.கே. மஸ்தான் என்பவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

ஐ.ம.சு.முன்னணி சார்பில் இம்முறை போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களான, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்த நிலையில், இந்தப் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட மஸ்தான் என்பவர் வெற்றி பெற்றுள்ளமை அரசியல் அரங்கில் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.

வன்னி மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி 20,965 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்த ஆசனத்துக்கு மேற்படி மஸ்தான் 7298 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேர்லில் வெற்றி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மஸ்தான்; நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வகையில், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு தனக்குக் கிடைக்கும் சம்பளப் பணத்தினை, ஏழை மாணவர்களின் கல்விக்காக வழங்கவுள்ளதாகக் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்