அன்சில் வென்றார்; வீழ்ந்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு

🕔 February 10, 2018

– மப்றூக் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பின் படி, பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் வெற்றியீட்டியுள்ளார்.

வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி, மின்ஹாஜ் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்துக்கு 1207 வாக்குகளும், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரசுக்கு 1006 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதனடிப்படையில் மின்ஹாஜ் வட்டாரத்தில் சட்டத்தரணி அன்சில் வெற்றி பெற்றுள்ளார்.

மு.காங்கிரசில் முக்கிய பதவிகளை வகித்த அன்சில், மு.கா. தலைமையின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டு, அந்தக் கட்சியிலிருந்து விலகிய நிலையிலேயே, இந்த தேர்தலில் களமிறங்கியிருந்தார்.

அன்சிலை இந்தத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் நேரடியாக களத்தில் இறங்கி, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், அன்சிலின் வெற்றி – மு.கா. தலைவருக்கு பெருத்த ஏமாற்றமாகும். மேலும், கௌரவ ரீதியாகவும் மு.கா. தலைவருக்கு – அன்சிலின் வெற்றியானது பாரிய தோல்வியாக அமைந்திருக்கும் என கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்