தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், தவறான வழியில் பதவியைத் தொடர முயற்சிக்கின்றார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

🕔 February 6, 2018

– மப்றூக், றிசாத் ஏ காதர்  –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக் காலம், இன்றும் சில மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய உப வேந்தர் ஒருவவரை நியமிப்பதற்குரிய விண்ணப்பம் கோரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் நாஜிம், இழுத்தடிப்புச் செய்து வருவதாக, தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அந்தப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம். அப்துல் ஜப்பார் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே, இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

மேற்படி பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து வந்த நிதி ஒதுக்கீடுகள், தற்போதைய உபவேந்தரின் பதவிக் காலத்தில் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம். அப்துல் ஜப்பார் இதன்போது தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகத்துக்கு 772 மில்லியன் ரூபாய்  நிதி ஒதுக்கீடு கிடைத்ததாகவும், ஆனால் 2018ஆம் ஆண்டு 300 மில்லியன்களாக அந்த நிதியொதுக்கீடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேபோன்று, குவைத் நாட்டிலிலிருந்து தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து வந்த நிதியில், 1700 மில்லியன் ரூபாய், வேறு பல்கலைக்கழகமொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. உபவேந்தரின் செயற்திறனற்ற நடவடிக்கை காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது, பல்கலைக்கழக உபவேந்தர் தொடர்பில் மேலும் பல குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன. அவற்றினை வீடியோவில் காணலாம்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்