சாய்ந்தமருதில் யாராவது முட்டி மோத வந்தால், வன்முறையைக் கொண்டேனும் அடக்குவோம்: மு.கா. தலைவர் சண்டித்தனம்

🕔 February 4, 2018

– மப்றூக் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சாய்ந்தமருதில் எதிர்ப்பவர்களுக்கு, வன்முறையின் மூலமாகவேனும் அடக்குவதற்கு – தான் தயாராக உள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார்.

தங்களோடு யாராவது முட்டி மோத வந்தால், அவர்களுடன் சாய்ந்தமருதிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் சண்டையிட்டு மரணிப்பதற்கும் தயாராக உள்ளனர் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

வீடியோ

Comments