தனித்து போட்டியிட்டால் கட்சியைக் காப்பாற்றலாம்: அட்டாளைச்சேனையில் ஹக்கீம்

🕔 January 29, 2018

– முன்ஸிப் அஹமட் –

ள்ளுராட்சித் தேர்தலில் தனியாக போட்டியிடுவதன் மூலம் தமது கட்சியை வளர்க்க முடியும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இணைந்து, யானைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் நிலையிலேயே, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதேவேளை, இனிவரும் காலங்களில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என்று, யாருக்கும் தான் வாக்களிக்கப் போவதில்லை எனவும், அவர் இதன்போது தெரிவித்தார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்