பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம்

🕔 January 26, 2018

– மப்றூக் –

பிரதம மந்திரியை அரசாங்கத்துக்குள் பலவீனப்படுத்த நினைக்கின்றவர்களை பலவீனப்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவுகின்றது என, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்ளுராட்சித் தேர்தலில் யானைச் சின்னம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதன் மூலம் இந்த உதவினைப் புரிவதாகவும் அவர் கூறினார்.

இறக்காமம் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை சிங்களப் பிரதேசங்களில் தோற்கடிக்கும் நோக்கம் தமக்கு உள்ளதாகவும் ரஊப் ஹக்கீம் இதன்போது கூறினார்.

இங்கு உரையாற்றிய மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தொடர்ந்து தெரிவிக்கையில்; அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் தயா கமகே முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாக கூறினார்.

அதேவேளை, அமைச்சர் தயாகமகே யாருக்கும் கட்டுப்படுபவர் அல்ல எனவும் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்