தனது பதவிக் காலம் குறித்து, மைத்திரிக்கு சந்தேகம்; உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்

🕔 January 9, 2018

ன்னுடைய பதவிக் காலம், 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தின் பிரகாரம் 05 வருடங்களா அல்லது 06 வருடங்களா என, உச்ச நீதிமன்றத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினவியுள்ளார்.

இதற்கிணங்க, எதிர்வரும் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக, உரிய பதில் வழங்கப்படும் என்று, பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.

1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்புக்கிணங்க, ஜனாதிபதியொருவரின் பதவிக் காலம் 06 வருடங்களாகும். ஆயினும் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலம் 05 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த திருத்தம் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் பதவி வகித்த ஜனாதிபதிக்கு, 19ஆவது திருத்தம் செல்லுபடியாகுமா என்று வினவப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து 11ஆம் திகதி உச்ச நீதிமன்றம் ஆராயவுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்