தேர்தல் சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற 1041 மேலதிக பணியாளர்கள் நியமிப்பு

🕔 December 31, 2017

ள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக மேலதிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க நாடு முழுவதும் 1041 மேலதிக பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அந்த வகையில், நாடு முழுவதிலுமுள்ள பிரதான பொலிஸ் நிலையங்களுக்கு 03 பணியாளர்களும், ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு 02 பணியாளர்களுமாக நியமிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பொலிஸாரின் இந்த முயற்சியினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வரவேற்றுள்ளார்.

Comments