ஒன்றிணைந்த எதிரணியினருக்கு, இணையும் எண்ணம் கிடையாது: நாமல்

🕔 December 11, 2017

ள்ளுராட்சி தேர்தலை முன்னிறுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கான எந்தவித எண்ணமும் ஒன்றிணைந்த எதிரணியினருக்கு கிடையாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாராவது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக நடப்பார்களாயின், அவர்களுக்கு எதிராக சட்ட நடடிக்கை எடுக்கப்படும் என, அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Comments