கப்பல்துறை வர்த்தகம் அமைச்சர் ஒருவரின் உறவினரிடம் சிக்கிக் கிடக்கிறது: நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குற்றச்சாட்டு

🕔 November 16, 2017

லங்கையின் கப்பல்துறை வர்த்தகமானது இரண்டு கம்பனிகளின் ஏகபோக பிடியில் தற்போது சிக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சாட்டினார்.

இந்த மாபியாவானது முடிவுக்குக்குக் கொண்டுவரப்படுதல் வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே, இதனை அவர் கூறினார்.

குறித்த இரு கம்பனிகளில் ஒன்று, ஓர் அமைச்சரின் உறவினருக்குச் சொந்தமானது. மற்றையது அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

2018ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தில், துறைமுக ஒழுங்குமுறை ஒன்றினை நிதி அமைச்சர் அறிமுகப்படுத்துவதற்கு, ஐ.தே.கட்சி ஆதரவளிக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இதன்போது உறுதியளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்