நாடே அழுகிறது, நீங்கள் ஏன் பேசவில்லை; ஆலையடிவேம்பிலிருந்து துண்டுப் பிரசுரம்

🕔 May 26, 2015

– வி. சுகிர்தகுமார் –

நீங்கள் பேசாதிருப்பது நியாயமா? எனும் தலைப்பிடப்பட்ட துண்டு பிரசுரம் ஆலையடிவேம்பு பிரதேசமெங்கும் நேற்றைய தினம் காணப்பட்டன.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில், முழு நாடும் அழும்போது,  – ஆலையடிவேம்பு பிரதேசம் மட்டும் அமைதியாக இருப்பது ஏன் என, மேற்படி துண்டுப் பிரசுரத்தில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, வித்தியாவின் படுகொலை தொடர்பில், எதுவித எதிர்வினைகளையும் ஆற்றாத, ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாடசாலைகள், பெண்கள் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் அதன் பிரதிநிதிகளையும் – இந்தத் துண்டுப் பிரசுரமானது, மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளது.

வித்தியாவின் படுகொலை தொடர்பில், சக சமூகங்கள் கூட அழும்போது, ஆலையடிப் பிரதேசம் மட்டும் மௌனியாக இருப்பதற்குக் காரணம் – பயமா, பாரபட்சமா அல்லது பண்பியல் குறைபாடா எனவும் அந்த துண்டுப் பிரசுரத்தில் வினவப்பட்டுள்ளது.

‘மனச்சாட்சியுள்ள பொதுமக்கள்’ எனும் பெயரில் இந்தத் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.Hands bill - 01

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்