நீதியமைச்சராக தலதா, புத்தசாசன அமைச்சராக காமினி ஆகியோர் நியனம்

🕔 August 25, 2017
நீதியமைச்சராக தலதா அத்துகோரல மற்றும் புத்தசாசன அமைச்சராக காமினி ஜனவிக்ரம பெரேரா ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை  ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெனாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விஜயதாஸ ராஜபக்‌ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர், அவர் வகித்த இரண்டு அமைச்சுப் பதவிகள், மேற்படி இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

தலதா அத்துகொரல ஏற்கனவே வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். காமினி ஜயவிக்ரம பெரேரா – நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராகப் பதவி வகிக்கும் நிலையிலேயே புத்தசாசன அமைச்சினைப் பொறுப்பேற்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்