உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் நிறைவேற்றம்

🕔 August 25, 2017

ள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம், இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்படி சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்தன.  44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

அந்த வகையில், இச் சட்ட மூலத்துக்கு எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை.

முன்னதாக குறித்த சட்டமூலம் தொடர்பில் தினேஷ் குணவர்தன முன்வைத்த திருத்தங்கள் மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.

எனினும் சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கேட்டுக் கொண்டதற்கிணங்க மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்