மூதூர், தோப்பூர் பிரதேசங்களில், சுகாதார நிலையம், மத்திய மருந்தகம் ஆகியவை திறந்து வைப்பு

🕔 August 15, 2017

– சப்னி அஹமட் –

மூதூர் – தக்வா நகரில் அமைக்கப்பட்ட கிராமிய சுகாதார நிலையம் மற்றும் தோப்பூர் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகம் ஆகியவற்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் திறந்து வைத்தார்.

மேற்படி கிராமிய சுகாதார நிலையம் மற்றும் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தகம் ஆகியவற்றினைத் திறந்து வைக்கும் நிகழ்வுகள் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றன. இந் நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேற்படி கிராமிய சுகாதார நிலையம் மற்றும் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தகம் ஆகியவை தலா 5.5 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுகாதார நிலையம் மற்றும் மத்திய மருந்தகம் ஆகியவற்றினைத் திறந்து வைக்கும் மேற்படி நிகழ்வுகளில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர் , லாஹிர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர் உசைனுடீன் மற்றம் கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Comments