தலைப்புச் செய்திகள்

மஹிந்த கலந்து கொண்ட கெஹலிய மகன் திருணம்; எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களால் களை கட்டியது

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெலவினுடைய மகன் ரமித் ரம்புக்வெலவின் திருமணம் நேற்று வியாழக்கிழமை கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

தனது நீண்ட நாள் காதலியான நட்டாலியை நேற்றைய தினம், ரமித் ரம்புக்வெல மனைவியாக்கிக் கொண்டார்.

இந்த திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள், விளையாட்டுத் துறை பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ரமித் ரம்புக்வெல – முதல் தர கிரிக்கட் வீரராவார். தமிழ் யூனியன் கிரிக்கட் மற்றும் அதலட்டிக் கிளப் ஆகிய களங்களுக்காக அவர் விளையாடுவதோடு, இலங்கை அணிக்காகவும் விளையாடுகிறார்.

இந்த திருமண நிகழ்வில் ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, வாசுதேச நாணயகார மற்றும் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மணமகன் ரமித் 1991ஆம் ஆண்டு பிறந்தவர்.