ஐ.தே.கட்சியை கழற்றி விடுமாறு, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் வலியுறுத்தல்

🕔 May 14, 2017

தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஐ.தே.கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் வலியுறுத்துவதாகத் தெரியவருகிறது.

இந்தக் குழுவில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.

தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செய்து கொள்ளப்பட்ட மேற்படி ஒப்பந்தம், இரண்டு வருட காலத்துக்கானதாகும். அந்த வகையில், எதிர்வரும் ஓகஸ்ட்ட மாதத்துடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் காலவதியாகிறது. இந்த நிலையில், மேற்படி ஒப்பந்தத்தை நீடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீடிக்கக் கூடாது என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் வலியுறுத்துகின்றனர்.

ஐ.தே.கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆயோருக்கிடையில், இரண்டு கட்சிகள் சார்பாகவும் மேற்படி ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்