மஹிந்தவின் பாதுகாப்பு விவகாரம்; தருணம் பார்த்து அடிக்கிறார் சந்திரிக்கா

🕔 May 8, 2017

நாட்டில் யுத்தம் இல்லை, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோருவது ஏன் என புரியவில்லை என்று, முன்னை நாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக் குறித்து ஒரே விதமாகவே செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பா அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நான் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்று சுமார் 15 மாதங்களில், மஹிந்த மற்றும் அவருடைய சகோதர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர், எனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீக்கும்படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன், நான் 2005ம் ஆண்டு நொவம்பர் மாதம் ஓய்வு பெற்ற வேளை, இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இருந்தன.

இதற்கமைய, விடுதலைப் புலிகளால் எனக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை காணப்பட்டது.

நான் ஓய்வுபெற்றதன் பின்னர் எனது பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு சபையின் விசேட குழுவொன்று ஆராய்ந்தது. அவர்கள் தேவையான ஆயுதங்களுடன் 300 பாதுகாப்புத் தரப்பினரை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தனர்.

எனினும், நான் அந்த பரிந்துரையை நிராகரிதேன். 150 பேர் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் உள்ளிட்ட 10 வாகனங்களை மட்டுமே நான் ஏற்றுக் கொண்டேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்படுவது குறித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் குறித்து நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறோம். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து ஒரே விதமாகவே செயற்பட வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்