சபை அமர்வினை ஒத்தி வைத்து, டெங்கு தொடர்பில் ஆராய்வு

🕔 March 21, 2017
– சப்னி அஹமட் –

கிழக்கு மாகாணத்தில் பரவி வரும் டெங்கி நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கூட்டம், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை அமர்வு இதற்காக இன்று ஒத்தி வைக்கப்பட்டது

மேற்படி கூட்டத்தில், டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது. மேலும், டெங்கு ஒழிப்புச் செயற்பாட்டின்போது ஆளணி, வாகனப் பற்றாக்குறை இருப்பின் அவற்றை உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும், இதன்போது உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

மேலும் ஊடங்கள் பிழையான தகவல்களை மக்களுக்கு வழங்குகின்றன என்றும், கடந்த இரு தினங்களாக சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகள் இல்லாமல் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் இதன்போது கேட்டுக் கொள்ளப்பட்டது.

திருகோணமலையில் இதுவரையில் 2,388 டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார். , திருகோணமலையில் 15 பேரும் மட்டக்களப்பில் 3 பேரும் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண தவிசாளர், முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளிட்ட அனைத்து முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு இந்தக் கூட்டத்தில்  விசேட தீர்மானங்களை மேற்கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்