தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்; அப்போலோ வைத்தியசாலை உறுதி செய்தது

🕔 December 6, 2016

jayalalitha-01ந்தியாவின் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திங்கட்கிழமை  இரவு 11.30 மணியளவில் தனது 68ஆவது வயதில் மரணமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக இந்தியாவின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினரால் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் உறுதியானது.

இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவருடைய போயஸ் கார்டன் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, அங்கிருந்து சென்னை ராஜாஜி மண்டபத்தில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து 07 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழக முதமைச்சருமான ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி இரவு 10 மணிக்கு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், நேற்று திடீரென முதலமைச்சருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே மரணித்தார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் அப்போலோ வைத்தியசாலை அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே, சில தொலைக்காட்சிகள் – ஜெயலலிதா இறந்து விட்டதாக செய்திகளை வெளியிட்டிருந்தது. ஆயினும், அந்தச் செய்தியினை அப்போலோ வைத்தியசாலை நிருவாகம் மறுத்திருந்தது.

ஆயினும், தற்போது ஜெயலலிதா மரணமானதை உறுதி செய்து, அப்போலோ வைத்தியசாலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.jeya-death-011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்