பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சரானார்

🕔 December 6, 2016

panneer-selvam-011ந்தியாவின் தமிழக முதல்வமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் பன்னீர்செல்வம் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

தற்போதைய தமிழக அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்த நிலையிலேயே, பன்னீர் செல்வம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சராக பன்னீர் செல்வம் பதவியேற்பது, இது – மூன்றாவது முறையாகும்.

ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியா சந்தர்ப்பத்திலும்,  சிறை சென்ற காலகட்டத்திலும் ஜெயலலிதாவுக்கு மிகவும் விசுவாசமுடைய பன்னீர் செல்வம் இரண்டு தடவை முதலமைச்சராகப் பதவியேற்றுச் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அ.தி.மு.க.வில் ஜெயலலிதா வகித்த செயலாளர் பதவிக்கு, பன்னீர் செல்வம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்