யாழ்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்கரன் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த ஐவரையும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் பணிப்புரை வழங்கினார்.
எனினும் எதிர்வரும் திங்கட் கிழமை இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.



