சிகை அலங்காரத் தொழிலாளியை தாக்கிய, பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

🕔 September 24, 2016

protest-033
– க. கிஷாந்தன் –

பொலிஸ் அதிகாரியொருவர், சிகையலங்காரத் தொழிலாளி ஒருவரை, ஹட்டன் நகரில் தாக்கியமையினைக் கண்டித்து, இன்று சனிக்கிழமை பகல், ஹட்டன் நகரில் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது.

நேற்று வெள்ளிக்கிழமை, குறித்த ஊழிர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

“மலையக தமிழ் இளைஞர்களுக்கு எதிராக பொலிஸார் அரங்கேற்றும் அடிதடி அராஜகத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் இளைஞர்கள் வீதிக்கு வருவதற்கு அச்சப்படும் சூழ்நிலையை மீண்டும் இந்நாட்டில் அரங்கேற்ற இடம் கொடுக்க வேண்டாமென” இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அன்று புஸ்ஸலாவ பொலிஸ் நிலையத்தில் தோட்டப்பகுதி தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு தூக்கிட்டு உயிரிழந்ந சம்பவம் மனதில் இருந்து அகன்று செல்வதற்கு முன்பாக, ஹட்டனில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வேளையில் இவ்விரு சம்பவங்களையும் வன்மையாக கண்டிப்பதோடு, நடந்தேறிய தாக்குதல் சம்பவத்துக்கு உரித்தான அதிகாரிக்கெதிராக நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளவேண்ம்” என்றார்.protest-022 protest-011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்