ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

🕔 September 24, 2016

nfgg-011றாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் நீதியானதும், பாரபட்சமற்றதுமான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபரிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது.

முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று வெள்ளிக்கிழமைபொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஏறாவூரில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் இதுவரை ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்னர். இப்பாரிய குற்றச் செயலோடு தொடர்புபட்ட பல தடயங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்விடயத்தில் துரிதமாக செயற்பட்டு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட ஏறாவூர் பொலிஸார் பாராட்டுக்குரியவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் மிக முக்கிய நபராகக் கருதப்படுகின்ற நபரொருவர், அரசியல் பின்னணிகளையும், வேறுசெல்வாக்குகளையும் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. எனவே, மேற்படி கொலை தொடர்பான விசாரணைகளை திசை திருப்ப அவர் முயற்சிக்கக் கூடும் என, ஏறாவூர் மக்கள் சந்தேகமும் கவலையும் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஏறாவூர் பிரதேச சிவில் சமூக பிரதிநிதிகள் பலரும், இது தொடர்பில் தமது கவலையினை ஏறாவூர்ப் பொலிசாருக்கும், பொலிஸ் மா அதிபராகிய தங்களுக்கும் ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளனர்.

ஆகவே, தங்களின் தலைமையில் இயங்கும் பொலிஸார், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பில் திருப்திகரமான, துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டமையைப் போன்று, ஏறாவூர் இரட்டைக் கொலை விடயத்திலும் நடவடிக்கைகளை மேற் கொள்வீர்கள் என நம்புகின்றோம்.

அந்த வகையில், இவ்விடயத்தில் விசேட புலனாய்வுப் பிரிவினை ஈடுபடுத்தி – நீதியான, சுதந்திரமான, துரிதமான விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டணையை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்