இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய

🕔 September 24, 2016

Mahinda deshapriya - 034ள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும், எல்லை நிர்ணய செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஒரு மாத காலமாயினும் தேவைப்படும்.

இதேவேளை, தேர்தல்கள் தொடர்பான வேலைகளை செய்வதற்கு 75 தொடக்கம் 90 நாட்கள் தேவையாக இருக்கும்.

எனவே, டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர், உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை” என்றார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்