ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை, 05 வருடங்களுக்கு ஒத்தி வைத்து தீர்ப்பு

🕔 February 8, 2019

ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் வழங்கிய 06 மாத கடூழிய சிறைத்தண்டனையை, ஹோமாகம மேல் நீதிமன்றம் 05 வருடங்களுக்கு ஒத்தி வைத்து இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

சந்தியா எக்னலிகொடவை ஹோமாகம நீதிவான் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்திய குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு 06 மாதங்களைக் கொண்ட கடூழிய சிறைத்தண்டனையை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் ஞானசார தேரர் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட போதே, ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 06 மாதங்களைக் கொண்ட கடூழிய சிறைத்தண்டனை, 05 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக, 06 வருடங்களைக் கொண்ட கடூழிய சிறைத்தண்டனையை ஞானசார தேரர் அனுபவித்து வருகின்றார்.

தற்போது ஞானசார தேரர் அனுபவிக்கும் 06 வருட கடூழிய சிறைத் தண்டனையும், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பும் வெவ்வேறு வழக்குகளுக்கான தீப்புகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்