நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம்: 215 சதவீதத்தால் அதிகரிப்பு

🕔 August 2, 2018

மைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வருடம் ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் வகையில் இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பானது 215 சதவீதமாக இருக்கும் என்றும், அண்மையில் நீதிபதிகளின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு இணையாக, மேற்படி சம்பள அதிகரிப்பு அமையும் எனவும் நாடாளுமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 54, 285 ரூபாயிலிருந்து 120,000 ரூபா வரையும் அதிகரிக்கிறது.

பிரதியமைச்சர்களின் சம்பளம் 63, 500 ரூபாயிலிருந்து 135, 000 ரூபா வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் சம்பளம் 65, 000 ரூபாயிலிருந்து 140, 000 ரூபா வரைக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பினை இந்த மாதத்திலிருந்து இவர்கள் பெறுவார்கள் என்றும், அதேவேளை ஜனவரி மாதம் தொடக்கம் ஜுலை மாதம் வரையிலான சம்பள நிறுவையும் இவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்