ராணுவத் தளபதியின் பதவிக் காலம், ஒரு வருடம் நீடிப்பு

🕔 July 11, 2018

ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக் காலம் ஒரு வருட காலத்துக்கு  நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி நீடிப்பை வழங்கியுள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, இலங்கையின் 22ஆவது ராணுவத் தளபதியாக கடந்த வருடம் ஜுன் மாதம்  27ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

1981ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்து கொண்ட மகேஸ் சேனநாயக்க, கொழும்பு ஆனந்த கல்லூரியில் கல்வி கற்றவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்