ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி

🕔 June 21, 2018

  – க.கிஷாந்தன் –

டூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை ஹட்டனில் பேரணியொன்று இடம்பெற்றது.

ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், ஹட்டன் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து, குறித்த பேரணியை நடத்தினர்.

ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரை விடுவிக்குமாறு வழியுறுத்தியே இந்த பேரணி இடம்பெற்றது.

ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் விகாராதிபதிகளில் ஒருவரான ஒமந்தே தீராநந்த தேரரின் ஏற்பாட்டில் பிக்குமார்கள் மற்றும் ஹட்டன் பிரதேச மக்கள் மலர் தட்டுக்களை ஏந்தியவண்ணம் இதில் கலந்து கொண்டனர்.

ஹட்டன் மல்லியப்பு சந்தியிருந்து நீக்ரோதாரம விகாரைக்கு ஊர்வலமாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், விகாரையில் பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

Comments