றிசாட் பதியுதீன் வசமுள்ள அமைச்சுக்கு, பிரதியமைச்சராக புத்திக நியமனம்

🕔 June 19, 2018

க்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக பிரதியமைச்சராக இன்று செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்றத்துக்கு, மாத்தறை மாவடத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியினூடாக இவர் தெரிவானார்.

கடந்த 11ஆம் திகதி பிரதியமைச்சர்கள் 05 பேரும் ராஜாங்க அமைச்சர்கள் 02 பேரும் நியமிக்கப்பட்ட நிலையிலேயே, இன்றைய தினம் புத்திக பத்திரனவும் பிரதியமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

அமைச்சர் றிசாட் பதியுதீன் வசமுள்ள கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கே தற்போது புத்திக பத்திரண பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்திக பத்திரண ஓர் ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்