ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை, அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாம்: மஹிந்த

🕔 June 18, 2018

ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டமை அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நிகழ்வொன்றில்  அவர் இதனைக் கூறினார்.

“ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமை, திட்டமிட்டதொரு செயலாகவே கருதவேண்டியுள்ளது. இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும்” எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் என்னலிகொடவின் மனைவியை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்திய குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷ மேற்படி கருத்தினை வெளியிட்டுள்ளார்.

Comments