திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டி; முற்றாக நாசம்

🕔 May 16, 2018

– க. கிஷாந்தன் –

முச்சக்கர வண்டியொன்று கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகில் இன்று புதன்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியில் தீடீரென  தீப்பிடித்தது.

இதன்போது  சாரதியும் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறு குழந்தையுடன் 05 பேர் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்தமையினால், எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட தீயை பிரதேசவாசிகள் இணைந்த போதும், அது முற்றாக எரிந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Comments