எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக, எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

🕔 April 13, 2018

டுத்த நாடாளுமன்ற அமர்வின்போது, தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, அதற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும், நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்திருந்தனர்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் எனும் வகையில், மேற்படி 16 அமைச்சர்களும் தமது பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அனுமதியை வழங்கியிருந்தார் என, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலே, தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக அமைச்சர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Comments