சிங்களவர் தாக்கப்பட்டதால் மாதம்பையில் பதட்டம்; பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பில்

🕔 March 19, 2018

 சிலாபம் – மாதம்பை பகுதியில் சிங்களவர் ஒருவரை, முஸ்லிம் ஒருவர் தாக்கியமை காரணமாக, அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள வயோதிப நபர் ஒருவர் மீது முஸ்லிம் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவுவு இடம்பெற்துள்ளது.

மாதம்பையிலிலுள்ள 27 வயதுடைய முஸ்லிம் நபர் ஒருவரே, குறித்த யோதிபரை மாதம்பையில் வைத்துத் தாக்கியுள்ளார்.

பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர்  மாதம்பை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்பு அங்கிருந்து சிலாபம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.

இந்நிலையில்  மாதம்பை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை ஒரு வித பதற்ற நிலை காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பொலிஸாரும் ராணுவத்தினரும் இப்பகுதியில்  பாதுகாப்பைப்  பலப்படுத்தியுள்ளனர்.

வயோதிபர்மீது தாக்குதலை மேற்கொண்ட முஸ்லிம் நபரை, மாதம்பை பொலிஸார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

Comments