அடுத்து வரும் 10 நாட்களுக்கு, நாட்டில் அவசரகால நிலை; ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என, அமைச்சர் தகவல்

🕔 March 6, 2018

நாட்டில் அடுத்து வரும் 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று, அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்

ஜனாதிபதியுடன் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் இந்தத் தகவலை அமைச்சர் கூறினார். மேற்படி சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அவசரகால நிலயை 10 நாட்களுக்கு  பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த நிலையினை நீடிக்க வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற வேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்