முச்சக்கர வண்டி புரண்டது; சாரதிக்கு தூக்கக் கலக்கம்

🕔 January 11, 2018

– க. கிஷாந்தன் –

மு
ச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் சாரதி சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். இச்சம்பவம் ஹட்டன் மல்லியப்பு சுற்று வட்டத்துக்கு அருகில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

மாவனெல்ல பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக ஹட்டன் நகரம் சென்று கொண்டிருந்த மேற்படி முச்சக்கர வண்டி,  ஹட்டன் – கொழும்பு  பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு சுற்றுவட்டத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments