ஏழு மணிக்கு மேல் ஈடுபடக் கூடாது; வேட்பாளர்களுக்கு மஹிந்த தேசப்பிரிய தடை விதிப்பு

🕔 January 5, 2018

வேட்பாளர்கள், இரவு 7.00 மணிக்குப் பிறகு வீடுகளுக்குச் சென்று வாக்குக் கேட்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தடை விதித்துள்ளார்.

கட்சிகளின் செயலாளர்களுக்கு சுற்று நிருபம் ஒன்றினூடாக இந்த அறிவித்தலை அவர் விடுத்துள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், இரவு 7.00 மணிக்குப் பின்னர், வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்பதற்கும், பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், இந்த சுற்று நிருபத்தினூடாக ஆணையாளர் தடை விதித்துள்ளார்.

இசைக் குழுக்களையும், கட்சிக் கொடிகளையும் ஏற்றிக் கொண்டு வீடு வீடாகச் செல்லுதல் கூடாது எனவும் அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவோர் சுற்று நிருபத்திலுள்ள அறிவுறுத்தலை மீறுவார்களாயின், அவர்கள் தமது வேட்பாளர் தகுதியை இழக்க நேரிடும் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்