பிரதியமைச்சர் ஹரீசின், நிதி ஒடுக்கீடு தேவையில்லை; 15 லட்சம் ரூபாவை திருப்பியது சாய்ந்தமருது

🕔 November 3, 2017

– எம்.வை. அமீர் –

விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், சாய்ந்தமருது பள்ளிவாசல் அபிவிருத்திக்காக ஒதுக்கிய 15 லட்சம் ரூபா நிதியினையும் ஏற்பதில்லை என, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனீபா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சிசபையை வழங்குவதற்குத் தடையாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தடையாக இருக்கின்றமையினாலேயே, இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையை வழங்குவதற்கு தடையாக, சில அரசியல் வாதிகள் இருக்கின்றனர். அவர்களில் பிரதியமைச்சர் ஹரீஸும் ஒருவர்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் அமைச்சர்களான ஹக்கீம், றிஷாட் மற்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் போன்றோரால் சாய்ந்தமருது மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளது.

எமது மக்களின் நியாயமான கோரிக்கையை சிலர் வெறுங்கண்கொண்டு பார்க்கின்றனர். சாய்ந்தமருது மற்றும் கல்முனை மக்கள் உறவுகளால் ஒன்றினைந்தவர்கள். இந்த உறவுகளை யாரும் பிரித்து விட முடியாது. சாய்ந்தமருது மக்கள் நிருவாக பிரிப்பு ஒன்றை நட்டுமே கோருகின்றனர். அதனூடாக கல்முனை மாற்றுச் சமூகத்தின் கைக்கு சென்றுவிடும் என்று போலியான பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து, உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனை ஒன்று பள்ளிவாசலின் முற்றலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பணிமனை 24 மணிநேரமும் திறந்திருக்கும். இப்பணி மனைக்கு காத்திராமான ஆலோசனைகளை எவரும் தெரிவிக்க முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்