மு.கா.வின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக ஷிப்லி பாறூக் நியமனம்

🕔 October 15, 2017
– எம்.ரீ. ஹைதர் அலி –

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமானரவூப் ஹக்கீம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
காத்தான்குடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போது இந்த நியமனம் வழங்கப்பட்டது.
 
கட்சி முக்கியஸ்தர்களுடனான இக்கலந்துரையாடலின்போது, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என். முபீன் மற்றும் கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்