முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது; ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்: பொதுபல சேனா வலியுறுத்தல்

🕔 June 21, 2017

கிழக்கு மாகாணத்திலுள்ள பல தொல்பொருள் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதையும், நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டு, அதனை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ஆகியோரை பொதுபல சேனா வலியுறுத்தியுள்ளது.

பொதுபல சேனா அமைப்பினர் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மகல்கந்த சுதத்த தேரர், பொதுபல சேனா சார்பில் மேற்படி வலியுறுத்தலை விடுத்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்ரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைக் குறிப்பிட்டு, இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

“இந்த அரசியல் தலைவர்கள் நிச்சயமாக மேற்சொன்ன விடயங்களை அறிவிக்க மாட்டார்கள். ஏனென்றால், 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, சிறுபான்மையினரின் வாக்குகளை அவர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

அடுத்த ஜனாபதித் தேர்தலை, இந்த அரசியல் தலைவர்கள் குறி வைத்துள்ளமையினால், மேற்படி கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

மேலும், நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம், தீர்வு காண்பதற்கு சிங்களத் தலைவர்கள் எண்ணம் கொண்டாலும், முஸ்லிம் அமைச்சர்களுக்கு அதில் விருப்பமில்லை. இனவெறி மற்றும் மதத் தீவிரவாதம் ஆகியவற்றினை முன்கொண்டு செல்வதற்காக, பூனையின் கால்களைப் போல் மக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றனர்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையிடா விட்டால், நாட்டில் காணப்படும் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்