மஹிந்த வேண்டாம்: ஹக்கீம் சிவப்புக் கொடி

🕔 May 25, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டாமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் 05காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஐ.ம.சு.முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் – மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மு.கா. தலைவர் ஹக்கீமுடன் இணைந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் மேற்படி கோரிக்கையை முன்வைத்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆயினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான சந்தர்ப்பமொன்றினை வழங்கலாமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – ஐ.ம.சு.முன்னணி சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவாராயின், ஐ.ம.சு.முன்னணியானது – சிறுபான்மை வாக்குகளை இழக்கும் நிலை உருவாகும் என, மு.கா. தலைவர் ஹக்கீம் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்