கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து டொக்டர் அலாவுதீன் நீக்கம்

🕔 October 15, 2016

alavudeen-012– அஹமட் –

ல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.எம். அலாவுதீன், குறித்த  பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அதிகாரமற்ற வேறொரு பதவிக்கு அமர்த்தப்படவுள்ளார் என, கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

நிருவாக ஒழுங்கு முறைக்கு முரணாகச் செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டின் பின்னணியிலேயே,  கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து, இவரை அகற்றுவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித் தளத்துக்கு கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

தனக்குக் கீழ் பணி புரிகின்றவர்களுடனும், ஏனைய அதிகாரிகளுடனும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.எம். அலாவுதீன் நடந்து கொள்ளும் முறை தொடர்பில், ஏற்கனவே கடுமையான விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நிருவாக ஒழுங்கு முறைமையினை மீறி,  அண்மையில் இவர் நடந்து கொண்டார் எனவும், அந்த செயற்பாடானது உயர் மட்டங்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்தே, இவரை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து அகற்றுவதெனவும், அதிகாரமற்ற வேறொரு பதவிக்கு நியமிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள அலுவலகத்துக்கு, வேறொரு பதவி வழங்கப்பட்டு, அலாவுத்தீன் இடமாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்