‘சாத்தானியம்’ நூல், சனிக்கிழமை வெளியீடு

🕔 June 11, 2015

சாத்தானியம் - அட்டைப்படம் - 01– அபூமனீஹா –

ட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாநிதி எஸ்.எல்.எம். றமீஸ் எழுதிய ‘சாத்தானியம்’ எனும் நூலின் வெளியீட்டு விழா, எதிர்வரும் சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு கொழும்பு – 07 இல் அமைந்துள்ள  லக்ஸ்மன் கதிர்காமர்  கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

நூலாசிரியர் றமீஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் பிரதம அதிதியாகவும், பலஸ்தீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எச்.இ. சுஹைர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் – நூல் வெளியீட்டு விழாவில் விசேட பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்